இப்படிக்கு இவர்கள்

நியாயமான கோரிக்கை

செய்திப்பிரிவு

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக சென்ற ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அமைந்தது.

இந்த நிலையில் சுற்றுச்சூழல்குறித்த அக்கறை கலந்த கருத்துகள் இடம்பெற்ற தலையங்கம் சிந்திக்கவைத்தது. புவி வெப்பமயமாதல் சர்வதேசப் பிரச்சினையாக மாறியுள்ள இன்றைய சுழலில், கார்பன் டைஆக்சைடை அதிகம் வெளியேற்றுவதில் வாகனங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமான நாடுகள் மாசு வெளிப்படுத்தாத தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அவற்றை ஏழை நாடுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை நியாயமானது.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

SCROLL FOR NEXT