‘வாசகர் திருவிழா’ பகுதியில் புத்தகக் காட்சி பற்றி ஒவ்வொரு நாளும் வெளியான செய்திகள் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தன.
பிரபலங்கள் வாங்கிய புத்தகங்கள் மூலம் (என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன்?) அந்தப் புத்தகங்களின் முக்கியத்துவத்தை எங்களால் உணர முடிந்தது. மேலும், ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’, ‘உங்களிடம் இருக்கின்றனவா இந்தப் புத்தகங்கள்?’ போன்றவை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு நீங்கள் கொடுத்த டிப்ஸ்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற (2001) சி.சு. செல்லப்பா எழுதிய ‘சுதந்திரதாகம்’ கிடைக்கவில்லை. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் மாவட்டப் பொது நூலகங்கள், அரசுக் கல்லூரிகள், பல்கலை நூலகங்களில்கூட இல்லை. உரியவர்கள் புத்தகங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
- இல. கணேசன்,நெல்லை.