இப்படிக்கு இவர்கள்

மண்ணுக்குரிய மரபன்று

செய்திப்பிரிவு

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் திருச்செங்கோட்டு மக்களின் மனதைப் புண்படுத்துமாறு இருப்பின், அதைத் தக்க வழிகளில் போராட்டக் குழுவினர் எதிர்கொண்டிருக்கலாம்.

மேலும், அந்நாவல் வெளிவந்தபோதே அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும். மாதொருபாகன் வெளியாகி நான்காண்டுகளுக்குப் பின் அதைத் தடை செய்யக்கோருவதும், பெருமாள்முருகனை அவன் இவன் என ஏகவசனத்தில் பேசுவதும் நம் மண்ணுக்குரிய மரபுமன்று.

ஒருவரது கருத்துச்சுதந்திரம் பாதிக்கப்படுகின்றபோது ஒற்றைக் குரலில் போராட்டக் குழுவினரைப் போல் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அணி திரண்டிருக்க வேண்டும்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சிந்தனையாளர்கள் அவரோடு திருச்செங்கோட்டுக்குச் சென்று, போராட்டக் குழுவினரிடம் தெளிவான சில விளக்கங்களை அளிக்க முயன்றிருக்க வேண்டும்.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT