இப்படிக்கு இவர்கள்

வேலையில்லாப் பட்டதாரிகள்...

செய்திப்பிரிவு

என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டுப் பல்லாண்டு காலமாகப் பல லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

ஆனால், அறிவிப்பு செய்து அதன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களையும் பரிசீலித்து வேலை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பவர்களின் நிலை என்னாகும்?

தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களைத் தவிர, ஏனைய காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெற்று, பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனும் ஜி.கே.வாசனின் கருத்து வரவேற்கத் தக்கது.

- பொன். குமார்,சேலம்.

SCROLL FOR NEXT