தமிழகத்தில் அதிகரித்துவரும் சாலை விபத்துகள் கவலை தருகின்றன. வீட்டை விட்டு வெளியில் வந்தால், பத்திரமாக வீடு திரும்புவோமா என்ற பயத்தில்தான் வாகனத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பின்னிரவு நேரங்களில், நின்றுகொண்டிருக்கும் லாரிகளில் மோதியே பெரும்பாலான விபத்துகள் நேருகின்றன. சாலை விதிகளை மீறுவதால் தங்கள் உயிருக்கும் பிற உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதை, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.