இப்படிக்கு இவர்கள்

டி.எம். கிருஷ்ணாவின் கடிதம் - சரிதான், ஆனால்...

செய்திப்பிரிவு

டி.எம். கிருஷ்ணாவின் திறந்த மடலில் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளால் பல குழுக்களாக செயல்படுவதாலும், சரியான தலைமை இல்லாததாலும் அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த மனநிலையை வெளிப்படுத்த முடியவில்லை.

தங்கள் பேச்சு எடுபடாது என்ற மனநிலைக்கு இந்திய முஸ்லிம்கள் வந்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூகக் காரணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி -7.

***

சமூகரீதியாகச் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு டி.எம். கிருஷ்ணா போன்றவர்கள் தரும் ஆதரவுக் குரல்கள் ஆறுதல் தருகின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

பெஷாவர் படுகொலைக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா உரைகளில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு முஸ்லிம் சமுதாய அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- ஜி. சஃபி,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT