இப்படிக்கு இவர்கள்

அரசு முன்வர வேண்டும்

செய்திப்பிரிவு

'சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் கத்தி முனையில் கொள்ளையடித்தவர் சிக்கினார்' என்ற செய்தி படித்தேன்.

கொள்ளையர்கள் சிக்குவதற்குக் காரணமான கல்லூரி மாணவியின் செயல் பாராட்டுக்குரியது. மாணவி அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்குப் பகிர்ந்த செயல், கொள்ளையர்கள் பிடிபட உதவியிருக்கிறது. வரும் காலங்களில் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு, வாகனத் திருட்டு, ‘ஈவ் டீசிங்' மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் போன்றவற்றைத் தடுக்கவும் மேலும், குற்றச் சம்பவங்களில் துப்புத்துலக்க உதவியாகவும், சென்னையின் தெருவிளக்குக் கம்பங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு முன்வர வேண்டும்.

அதற்கு முன்பாக, அந்தந்தப் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கில் அக்கறையுள்ள சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து, குறைந்த எண்ணிக்கையிலாவது முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினால் நல்லது.

- ஜேவி,சென்னை.

SCROLL FOR NEXT