மனிதர்களின் வெவ்வேறு விதமான தோற்றம், குறைபாடுகள் என்று பல விஷயங்களை நிர்ணயிப்பது மரபணுக்கள்தான் என்பதை ‘சிருஷ்டியின் அடிப்படைக் கூறு’ எனும் கட்டுரை மிகச் சிறப்பாக விளக்கியது.
பல தலைமுறைகளைக் கடந்திருக்கும் மனித இனத்தின் உடல் அமைப்பில், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை என்பன போன்ற தகவல்கள் ஆச்சரியமளித்தன. மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது என்ற தகவல் மிக முக்கியமானது.
- கே. சிவக்குமார்,மின்னஞ்சல் வழியாக…