அறிவியலை, இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் சிந்தனையும் கண்டுபிடிப்புகளும் இருக்க வேண்டும். அப்படி இல்லாத எதையும் கண்டுபிடிப்பாக அறிவியல் உலகம் ஏற்காது. ஆயிரம் கற்பனைகள் ஆயிரம் வருடங்களுக்கோ அதற்கும் முன்பாகவோ இருந்திருக்கலாம். அவற்றை வைத்துக்கொண்டு, விமானம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது என்று சொல்வது கட்டுக்கதைதான். இதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கட்டுரை. கற்பனைக்கும் அறிவியலுக்கும் உள்ள இடைவெளியை மாணவர்களுக்கு இந்தக் கட்டுரை தெளிவாக உணர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
- எஸ். சஞ்சய்,மதுரை.
***
நமது பழம்பெருமைகளில் கட்டடக் கலை, இலக்கியப் படைப்புகள், ஓவியங்கள் என்று எத்தனையோ உண்டு. அவற்றுக்குப் போதுமான சான்றுகளும் தரவுகளும் கிடைத்திருக்கின்றன. ஆனால், விமானம் போன்ற கண்டுபிடிப்புகளெல்லாம், அந்தக் காலத்தில் கற்பனை என்ற அளவில்தான் இருந்தன. மோடி தலைமையிலான மத்திய அரசு, இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறது. இது தொடர்ந்தால், மக்களுக்கு பாஜக அரசு மீதான நம்பிக்கை முற்றிலும் குலைந்துவிடும்.
- கண்மணி,ஆலங்குடி.