இப்படிக்கு இவர்கள்

நீராதாரங்களைப் பாதுகாப்போம்

செய்திப்பிரிவு

உயிர்மூச்சு பகுதியில் ‘தண்ணீர் தண்ணீர்’ கட்டுரையைப் படிக்கப் படிக்கக் கண்ணீர்தான் வந்தது.

இயற்கை நமக்களித்த சீதனங்களில் ‘நிலம், நீர், காற்று, வானம்’ ஆகிய நான்கையும் நாம்தானே பாழடித்துவிட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் குமுறுகிறது. நம்முடைய சுயநலத்துக்காக ஐம்பூதங்களில் நான்கைச் சீரழித்துவிட்டு, நெருப்பு சுடும் என்பதற்காக நாம் அதைத் தொடாமல் இருக்கிறோம்.

இப்போதும் ஒன்றும் குறைந்துபோகவில்லை. மீதமுள்ள நீராதாரங்களையாவது நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் முறையாகப் பராமரித்து நீர்வளத்தைப் பெருக்கலாம். சிறந்த முறையில் நீர் வளம் பாதுகாக்கும் இந்த அமைப்புகளுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு விருது வழங்கிக் கெளரவிக்கலாம்.

நன்னிலம் இளங்கோவன்,மயிலாடுதுறை.

SCROLL FOR NEXT