இப்படிக்கு இவர்கள்

தமிழர்களுக்கு வேலை இல்லையா?

செய்திப்பிரிவு

‘தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லையா?’ எனும் கட்டுரை பல உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறது. அரசு வேலைக்கான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை வட இந்திய மாணவர்கள் 10-ம் வகுப்பு இறுதியிலேயே தொடங்கிவிடுகிறார்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் தங்கள் மேல்நிலைக் கல்வியை முடிக்கும்போதே தகுதித் தேர்வுகளுக்கு முழு அளவில் தயாராகிவிடுகிறார்கள். ஆனால், தமிழக மாணவர்கள் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரிப் படிப்பை முடித்தபின்னர்தான் தொடங்குகிறார்கள்.

தவிர, ஆங்கில மோகம் கொண்ட தமிழகத்தில் தகுதித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எதிர்கொள்வதில் தயக்கம் எதற்கு?

- விளதை சிவா,சென்னை.

SCROLL FOR NEXT