இப்படிக்கு இவர்கள்

வேலை நிறுத்த அபாயம்

செய்திப்பிரிவு

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில், மத்திய அரசும் இந்திய வங்கிகள் சங்கமும் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகின்றன.

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அரசுத் தரப்பு இந்தப் பேச்சு வார்த்தைகளில் சரியான அக்கறை செலுத்தாமல் காலம் தாழ்த்தியே வந்துள்ளது.

மத்திய அரசும் இந்திய வங்கிகள் சங்கமும் இம்முறையாவது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வங்கித் துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு அசாதாரணமான சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஏனெனில், இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான்.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

SCROLL FOR NEXT