இப்படிக்கு இவர்கள்

திறமை இல்லாப் பட்டதாரிகள்’ - யார் குற்றம்?

செய்திப்பிரிவு

‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ பற்றிப் பேசும்போது, இதற்கான பொறுப்பை மாணவர்களிடம் மட்டுமே தள்ள முடியாது, கற்பிக்கும் திறமை வாய்ந்த ஆசிரியர்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். தொடக்க நிலை முதல் கல்வியின் தரமும் கற்பிப்பவர் திறமையும் வீழ்ந்துள்ளது.

கல்லூரியில் சேர்த்துவிடுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கும் பெற்றோர்கள், தேவையான கட்டுமானங்கள் இல்லாத கல்வி நிறுவனம், பயிற்சி இல்லாத ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள் இல்லாத கல்விக் கூடங்கள் - இவற்றால் எந்தத் திறமையுமற்ற வெறும் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடியும் (எனது 30 ஆண்டுகாலப் பேராசிரியர் பணியின் அனுபவத்தில் இதனை எழுதுகிறேன்).

- பேராசிரியர் ஜி. ராஜமோகன்,

உளவியல் சிகிச்சைத் துறை, பெசன்ட் நகர், சென்னை-90.

தொழில்துறை சார்ந்த படிப்புகளுக்கு மேல்நிலைப் பள்ளிகளிலேயே அடிப்படைப் பயிற்சிகள் நன்கு கற்றுத்தரப்பட வேண்டும், அதன் நவீன மாற்றங்களுடன். மனப்பாட முறையை என்று ஒழிக்கிறோமோ அன்றுதான் நாம் திறன்மிகுந்த மாணவர்களை உருவாக்க முடியும். நூலகங்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர்களும் பயனற்ற பொழுதுபோக்குகளைத் தள்ளி வைத்துவிட்டு, முக்கியத் தேவையான கல்வியில் கவனம் செலுத்தினால்தான் இந்தப் பிரச்சினை தீரும்.

- பழ. பாலகுமார்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT