தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது எனும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும் மருத்துவர்கள், ஊழியர்களின் அலட்சியம், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் கிராமப்புற மக்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
எனவே, அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில், இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்.
- செல்வகணபதி,திருப்பூர்.