புதிய ஆண்டில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அக்கறையுடன் கோடிட்டுக் காட்டியிருக்கிறது தலையங்கம்.
சென்ற ஆண்டின் இறுதியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தைக் கையாள்வதில் தமிழக அரசிடம் தடுமாற்றத்தை உணர முடிந்தது. சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதோடு 4 நாட்களில் ரூ. 60 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
புத்தாண்டிலாவது அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி -7.