இப்படிக்கு இவர்கள்

வீராங்கனை முத்தம்மா

செய்திப்பிரிவு

‘இந்தியாவின் முதல் ஐ.எப்.எஸ். வீராங்கனை - சி.பி. முத்தம்மா’ கட்டுரையில், வெளியுறவுத் துறையில் பணிபுரியும் பெண் என்றால், திருமணத்துக்கு முன் அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற செய்தி படித்து, இப்படியும் சட்டங்கள் இருந்தனவா என்று வியப்புற்றேன்.

பெண்களுக்கு எதிரான வெளியுறவுத் துறையின் பாகுபாட்டை எதிர்த்து வழக்கு நடத்தி வாதாடியதும், அதற்குத் தக்க நீதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்களும் நீதியின் அடையாளங்களாகவே அறியப்படுகிறார்கள். மேலும், சி.பி. முத்தம்மா தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தை, அனாதை ஆசிரமத்துக்காக அன்னை தெரசாவிடம் தானமாகத் தந்த செய்தி இன்னும் நம்மை நெகிழவைக்கிறது.

- கருப்பன்,வீரப்பன்சத்திரம்

SCROLL FOR NEXT