இப்படிக்கு இவர்கள்

லஞ்சத்தின் வேர்கள்

செய்திப்பிரிவு

வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிக்குச் சேர்பவர்கள் லஞ்சம் வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக வெளியான செய்தி இப்போதுள்ள நிலையை விளக்கியது.

முன்னாள் வருவாய்த் துறை ஊழியர் என்ற முறையில், நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். புதிதாகப் பணியில் சேர்பவர்கள் நேர்மையாகவும் துணிவாகவும் பணியாற்ற வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

எனினும், ஒரு சில அதிகாரிகள் அதைப் பொருட் படுத்தமாட்டார்கள். புதிதாகப் பணியில் சேர்பவர்கள் இதில் பங்கேற்காமல் தப்பிப்பது மிகவும் கடினம்.

- ஜீவன். பி.கே.,கும்பகோணம்.

SCROLL FOR NEXT