‘மாதொருபாகன்’ நாவலுக்கு முன்பே சோலை. சுந்தரபெருமாள் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
கோவையில் ஒரு அமைப்பு அந்த நாவலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியது. அந்த நாவலைப் படிக்காமலேயே அதை எரித்தனர் என்பதுதான் வேடிக்கை.
திருஞானசம்பந்தர் தொடர்பான ‘தாண்டவபுரம்’ நாவலில் வரலாற்றுப் பிழைகள் இருப்பதாக இணையக் குழுமங்களில் ஆரோக்கியமான விவாதம் நிகழ்ந்தது. அதற்கு, நாவலின் ஆசிரியர் தனது வாதங்களைத் தன் வலைப்பக்கத்தில் பதிவு செய்தார். ‘மாதொருபாகன்’ நாவல்குறித்த விமர்சனங்களும் அறிவுத்தளத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.