ஆண்டாளைக் கடவுளாகப் பார்க்காமல், கவிஞராகப் பார்த்து அவரின் பெருமையைப் பறைசாற்றுகிறது கட்டுரை. இயற்கையை ரசிப்பதுபோல இறைவனையும் ரசித்துக் கொண்டாடுவது கவிஞர்களுக்கே உரிய உரிமை. பறைவைகளிடமும் பூக்களிடமும் கருநீலத்தைக்
காணும் ஆண்டாளை எண்ணும்போது
‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா….
நின் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா’
என்ற பாரதியின் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.
அவள் சூடிக் கொடுத்த பூமாலையையும் பாடிக்கொடுத்த பாமாலையையும் இறைவன் ஏற்றுக்கொண்டான். அது அவள் இறைவன் மீது வைத்திருந்த ஆளுகைதானே?!
- இரா. தீத்தாரப்பன்,தென்காசி.