இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் ஆதரவில் புதிய அதிபர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நினைத்தால் எப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அரசையும் தூக்கி எறியலாம் என்பதற்கு, இலங்கைத் தேர்தல் முடிவுகள் ஒரு சாட்சி. ராஜபக்ச ஆட்சியில், மந்திரியாகப் பணியாற்றிய ஒருவரே, எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் ஆகி, அவரே அதிபராவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ராஜபக்ச அரசின் மேல் சிங்கள மக்களுக்கும் நம்பிக்கையில்லாமல் போனதுதான் இதில் குறிப்பிடத் தக்க விஷயம். ஜனநாயகம் என்ற பெயரில், சர்வாதிகார ஆட்சி நடத்திய ராஜபக்சவுக்கு இந்தத் தேர்தல் சரியான பதிலைக் கொடுத்திருக்கிறது.
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.