‘இந்து டாக்கீஸ்’ பகுதியில், ‘சிரிக்க வைத்தார்களா இவர்கள்?’ கட்டுரையைப் படித்தேன். இல்லை என்பதுதான் பதில். நல்ல நகைச்சுவை நடிகர்கள், கதாநாயக ஆசையில் முழுகிப்போனதால், கப்பல் கவிழ்ந்த கதையாக மாறிப்போனது.
வடிவேலு அரசியலில் தலையிடாமலிருந்து, தன் நகைச்சுவை ராஜாங்கத்தைத் தொடர்ந்து நடத்தியிருந்தால், இன்றைக்கும் அவருக்குத்தான் முதலிடம். என்.எஸ். கிருஷ்ணன், பாலையா, நாகேஷ், சந்திரபாபு, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, என்ற ஒரு நீண்ட பட்டியல் தமிழ் சினிமாவில் உண்டு.
திறமையான, அற்புதமான நகைச்சுவை நடிகர்கள் அவர்கள். சிரிக்க வைக்க மட்டுமில்லாமல் சிந்திக்க வைக்கவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இப்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் கிச்சுகிச்சு செய்கிறார்கள். வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இந்நிலை தொடர்ந்தால், 2014-ம் ஆண்டு மட்டுமில்லாமல், இனி வரும் ஆண்டுகளிலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை வறட்சி கடுமையாக இருக்கும்.
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.