இப்படிக்கு இவர்கள்

தஞ்சையில் கழித்த சிறு பிராயம்!

செய்திப்பிரிவு

பனிபடர்ந்த அதிகாலை, நடுங்கும் குளிர், கவிராயரின் இராம நாடக கீர்த்தனையைத் தொடர்ந்து தாதரின் சேமக்கல - சங்கோசை, கர்ப்போட்டக் காலம், பூப்போடும் மடையான் பறவைக் கூட்டம், காட்டுப் பீர்க்கு, பரங்கிக் கொடி பூக்களை தாங்கி நிற்கும் வீடுகள் - தீத்தாங்கல்லில் பட்டை தீட்டிய கரும் மண்தரையில் மாக்கோலம், கோயில்களில் அதிகாலை திருப்பாவை, திருவெம்பாவை பாட்டோசை, பெருமாள் கோயில்களில் வெண்பொங்கல் பிரசாதம் - ஆஹா நான் சிறு பிராயத்தில் அனுபவித்த தஞ்சை கிராமிய மார்கழியை அப்படியே அச்சில் வார்த்த தங்க.

ஜெயராமனின் கட்டுரை மிகவும் அற்புதம். இவ்வளவு அழகான மார்கழியை பெண்களின் அழகுக்கு உவமையாக ‘மாதங்களில் அவள் மார்கழி’ என்று வர்ணித்தது மிகையே அல்ல! தங்க. ஜெயராமனுக்கு பாராட்டுக்கள்.

- ராஜகோபால் கோவிந்தசாமி,‘தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT