இந்தியாவில் நடைபெறும் விபத்துக்களில் 15% தமிழகத்தில்தான் நடக்கின்றன என்று தமிழக ஆளுநர் கூறும் தகவல் கவலையளிக்கிறது.
விபத்துகள் ஏற்பட முக்கியமான காரணம் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதுதான். இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும். இருப்புப் பாதை போக்குவரத்தை அதிகப்படுத்துவது ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
தமிழ்நாட்டில் இருவழி ரயில் பாதை போடுவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.