இப்படிக்கு இவர்கள்

கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

‘செய்வீர்களா சகாயம்?’ கட்டுரை படித்தேன். கேள்வி கேட்பார் இல்லாமல் பல ஆண்டுகளாக நடைபெற்ற கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

அந்தக் கொள்ளைக் கூட்டம் நீதிமன்றங்களுக்குப் பொய்யான தகவல்களைக் கொடுத்து, தங்கள் காரியங்களைக் கச்சிதமாக முடித்துக்கொண்ட தகவல்கள் பேரதிர்ச்சி தருகின்றன. மலையைக் காணவில்லை, தமிழ் - பிராமி கல்வெட்டுகளைக் காணவில்லை என்று படிக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது. தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று எல்லாமே கொள்ளைபோனால் என்னதான் மிஞ்சும்? ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தைரியமாக முன்வந்து, கொள்ளையர்கள் நீதிமன்றங்களில் பெற்ற நீதிமன்ற உத்தரவுகள்பற்றியும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பது இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.

- கே. பலராமன்,திருவள்ளூர்.

SCROLL FOR NEXT