எஸ். ராமகிருஷ்ணனின் ‘வீடில்லாப் புத்தகங்கள்' பகுதியைத் தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன். அருமையான பதிவு.
'தி இந்து தமிழ்’ இதழுக்குச் சிறப்பு சேர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. நூல்நிலையம் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பது போன்ற உணர்வு மேலிடுகிறது. நாம் இதுவரை வாசித்திராத பல புத்தகங்களைப் பற்றி இந்தப் பகுதியின் மூலம் அறிய முடிகிறது.
அவரின் எளிமையான எழுத்துநடை இந்தத் தொடரை மேலும் இனிமையாகுகிறது. அவ்வை சண்முகத்தின் ‘ஒரு நாடக வாழ்க்கை’ ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது என்ற ராமகிருஷ்ணனின் ஆதங்கம் நியாயமானது.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.