இப்படிக்கு இவர்கள்

கிருஷ்ணய்யர் நம்மிடையே வாழ்வார்

செய்திப்பிரிவு

கிருஷ்ணய்யரைப் போன்றவர்கள் ஜனநாயகத்தின் வேர்கள். ஒரு நாட்டின் மதிப்பு, ‘அவர்கள் அறிஞர்களை நடத்துவதில் இல்லை; குற்றவாளிகளை நடத்துவதில் இருக்கிறது’ என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அந்த நெறி நிலைக்க இவர் உழைத்த உழைப்பு என்றும் மறக்க முடியாதது. நீதி என்ற நீர் எல்லா மட்டத்திலுள்ள மக்களுக்கும் கிடைக்க ஒரு வற்றாத ஜீவ நதியாய்த் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவருடைய பங்களிப்பு, தமிழக விவசாயிகளுக்கு மிக முக்கியமானதும் மறக்க முடியாததும் ஆகும். கிருஷ்ணய்யர் ஆற்றிய பணிகளுக்காக அவர் என்றும் நம்மிடையே வாழ்வார்.

- காந்தி கார்த்திகேயன் தோஹா,கத்தார்.

மனிதநேயம்மிக்க மாமனிதர் கிருஷ்ணய்யர். அடித்தள மக்களின் துயர் கண்டு, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒப்பற்ற செயல்பாட்டாளர். பொதுவுடமைவாதி என்ற பதத்துக்கு 100% சொந்தக்காரர். என்றும் வாழ்க அவர் புகழ்.

- தேவி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக...

SCROLL FOR NEXT