இப்படிக்கு இவர்கள்

கடன் அட்டையில் கவனம்!

செய்திப்பிரிவு

‘வணிக வீதி’ இணைப்பில் வெளியான கடன் அட்டைபற்றிய தகவல்கள் மிக அவசியமானவை. இந்த விஷயத்தில், தனியார் வங்கிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் அதிகமாக வரவுசெலவு வைத்திருப்பவர்களைப் பட்டியல் எடுத்து, ‘இவர்களுக்குக் கடன் அட்டை வழங்கியே ஆக வேண்டும்’ என்று முடிவுசெய்துவிடுவார்கள்போல. அதன் பிறகு, கடன் அட்டையை வாங்க வைக்கக் கடும் முயற்சியில் அந்த வங்கிகள் இறங்கிவிடுகின்றன. எனவே, கடன் அட்டைகுறித்த விழிப்புணர்வு தேவை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு!

- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.

SCROLL FOR NEXT