இப்படிக்கு இவர்கள்

ஏழைகளுக்கு நிம்மதி

செய்திப்பிரிவு

நாட்டில் நடக்கும் எல்லாவிதத் திருட்டுகளுக்கும் தண்டனை கொடுக்கும் நமது அரசாங்கம், காலம் காலமாக மிகவும் அநியாயமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு திருட்டை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? அதாவது, மின்சாரத்தை அரசாங்கத்திடமே வாங்கி, வீ்ட்டு வாடகைதாரர்களிடம் யூனிட்டுக்கு ரூபாய் 7, 8, 9 என்று விற்கும் அநியாயத்தைத் தடுக்க அரசாங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால், இது வலியவர்களிடம் அல்ல; மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களிடம் சுரண்டப்படுகிறது. மின் கட்டணம் 750 முதல் 1,000 வரை வசூலிக்கப்படு கிறது. அரசாங்கம் வாடகை, மின் மீட்டர் கட்டணத்தைக் கட்டுப்படுத்தினால் ஏழை மக்களுக்கு நிம்மதி.

- வி. ஜேக்கப் ஷிலோ,‘தி இந்து’ இணையதளம் வழியாக.

SCROLL FOR NEXT