இப்படிக்கு இவர்கள்

மூத்தோர் ஆதிக்கம்

செய்திப்பிரிவு

‘திமுகவில் மீண்டும் சீனியர்களின் ஆதிக்கம்’ என்ற செய்தி படித்தேன். திமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் குறுநில மன்னர்கள் போலவே செயல் படுகின்றனர்.

நீண்ட காலமாகத் தாங் கள் வகிக்கும் பதவியைப் பிறர் கைப்பற்றிவிடாதபடி ஆதிக்கம் செலுத்து கின்றனர். எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளுக் கும்கூட தாங்கள் கை காட்டும் ஆட் களுக்கே கிடைக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.

இதனால் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற இளைஞர்களும், துடிப்பாகக் கட்சிப் பணியாற்றும் மற்றவர்களும் அந்தக் கட்சியில் எந்தப் பொறுப்புக்கும் வர முடியவில்லை. திமுகவின் தேர்தல் தோல்விகளுக்குக் கட்சியின் அரசியல்ரீதியான செயல்பாடு கள் மட்டும் காரணமல்ல.

இதுபோன்ற வாய்ப்பிழந்த தொண்டர்களின் அதிருப்தியும் ஒரு காரணம் என்பதை அக்கட்சித் தலைமை உணர்ந்துகொள்ள வேண்டும்.

- கே எஸ் முகமத் ஷூஐப்.காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT