‘சூப்பர் -30’ திட்டம் மூலம் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திய மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமதுவுக்கு வந்தனம்.
கல்வியில் அரசுப் பணியின் முக்கியத்தைப் புரிந்து, சரியான திட்டங்கள் மூலம் அதைச் செயல்படுத்திய அவரது செயல்முறைகளை மற்ற ஆட்சியர்களும் பின்பற்ற வேண்டும்.
இதன்மூலம், கிராமப்புற மாணவர்கள் நலம் பெறுவார்கள் என்பதுடன், எதிர்காலத் தலைமுறையும் வளம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
சுபா தியாகராஜன்,சேலம்.