மத்திய திட்டக் குழு செயலிழந்து விட்டது என்று சொல்லி, அதைக் கலைக்க பிரதமர் மோடி முடிவெடுத்துவிட்டார். இந்திய அரசியலில் ஏற்பட்ட தேக்கமும், ஊழல்வாதிகளின் ஊடுருவலும்தான் இத்திட்டம் பற்றிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. புதிதாக ஒரு திட்டக் குழு அமைத்தால், குழுவின் பெயர்தான் மாறுமேயன்றி அதன் செயல்பாடுகள் மாறப்போவதில்லை. புதிய குழுவில் நடுநிலையான, பொருளாதார அறிஞர்கள் இடம்பெற்று, சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், இந்த மாற்றத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.