தங்கர் பச்சானின் தூய்மை இந்தியாவைப் பற்றிய கருத்து முற்றிலும் சரி. சாயப் பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் குப்பைகளால், நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபட்டு பல காலம் ஆகிவிட்டன.
பல நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக மாறிக்கொண்டுவருகின்றன. அரசு தன் தொழிற்கொள்கைகளை நெறிப்படுத்தி, அதன் மூலம் நாட்டின் தூய்மைப் பாதைக்கு வழிவகுக்காமல் துடைப்பக் கட்டையின் மூலம் தூய்மைப்படுத்த நினைப்பது வேடிக்கை.
- எஸ்.எஸ்.ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.