பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி குறைந்துள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலை 10 முறைகளுக்கு மேல் குறைக்கப்படுள்ளதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
உண்மையில் அதன்விளைவாக, எந்த உணவுப் பொருளின் விலையும் குறைந்துவிடவில்லை. எரிபொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணையின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அங்கு விலை குறையும்போது இங்கும் குறைகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த வேளையில் டீசலுக்கு வழங்கிவந்த மானியத்தை அரசு வெட்டியிருக்கிறது.
இதுபற்றி அமித் ஷா ஒன்றும் பேசமாட்டார். மக்களுக்கு மறக்கும் குணம் மிக அதிகம். அரசியல் கட்சிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.