இப்படிக்கு இவர்கள்

சமூகக் குற்றம்

செய்திப்பிரிவு

ஆசிரியையை அறைந்த மாணவன் - இது பெற்றோர்களின் குற்றம், சமூகக் கல்வி அமைப்பின் குற்றம், மொத்தத்தில் சமூகக் குற்றம்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பணம், பதவி, அதிகாரம் முதலானவற்றை அடையக் கற்பிக்கின்றனர். போட்டி, பொறாமை உணர்வை வளர்க்கின்றனர். வீட்டில் வெட்கமே இல்லாது குழந்தைகளுடன் உட்கார்ந்து, ஆபாசம், விகாரம், வன்முறை இவற்றை நியாப்படுத்தும் திரைப் படங்களைப் பார்க்கின்றனர்.

இன்றய தலைமுறை பெற்றோர், வன்முறை கார்ட்டூன்களைத் தன் பிள்ளைகளுக்கு விலை கொடுத்து வாங்கிக் கொடுக்கின்றனர். கல்வி முறையில் போட்டியும் பொறாமையும் ஏற்படும் வண்ணம் ரேங்க் என்ற முறையை ஏற்படுத்தி, ஒரு பந்தயத் தன்மையை உருவாக்கியிருக்கின்றனர்.

குழந்தைகளை ஒப்புமைப்படுத்துவதே குற்றங்களைப் பெருகச் செய்யும். கல்வி முறையில் ஏற்றத் தாழ்வு, கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வு. இப்படிப்பட்ட போட்டியும் பொறாமை உணர்வுகளும் இழையோடி நிற்கும் சமூகத்தில் இந்தக் குற்றங்கள் நடப்பதில் வியப்பொன்றும் இல்லை.

- டி.கே. நிதி,‘தி இந்து’ இணயதளம் வழியாக…

SCROLL FOR NEXT