எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் பிறந்த தினம் அன்று வெளியான கட்டுரை அவரது படைப்புகளை நினைவூட்டியது. அவர் எழுதிய ‘குறிஞ்சிமலர்’, ‘சத்தியவெள்ளம்’ போன்ற நாவல்கள், அந்தக் கால கல்லூரி மாணவர்களிடம் பெரும் தாக்கம் செலுத்தியது.
அவர் எழுதிய தொடர்களுக்கு ஓவியம் வரைந்த ஜி.கே.மூர்த்தியின் ஓவியங்களைப் பின்பற்றியே அந்தக் கால இளைஞர்கள் உடையணிந்தார்கள். அவரது படைப்புகளின் நினைவுகளில் மீண்டும் திளைக்க வைத்த ‘தி இந்து’வுக்கு நன்றி.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.