‘சமரசம் உலாவும் இடம்’ என்று சுடுகாட்டைத்தான் குறிப்பிடுவார்கள். ஆனால், அங்குகூட சாதிப் பாகுபாடு நிலவுகிறது. மனிதனின் வாழ்க்கை முடியும் இடத்தில்கூட மூடநம்பிக்கை நிலவுகிறது. ஆதிக்க சாதியினர் புதைக்கப்படும் இடத்தில் தலித் மக்களைப் புதைக்க மறுக்கிறார்கள்.
ஆனால், பிணங்களை எரிக்கவும் குழி வெட்டவும் சடங்குகள் செய்யவும் தலித் மக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிலோனி கூறியிருப்பது சிந்திக்கை வைக்கிறது. சமூகத்தைச் சீரழிக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது போராட்டம் வரவேற்கத் தக்கது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.