மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர். அந்துலே என்றாலே அவர் காலத்திய ஊழல்களும் நினைவுக்கு வரும். அவர் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கலையையும் கலைஞர்களையும் ஆதரிப்பதற்காக என்று கூறி ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்' என்ற தனிப்பட்ட அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.
அனைத்துக்கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடமிருந்தும் ஒரு டன்னுக்கு ரூ. 2.50 வீதம் நன்கொடை பெற்றார்.
அப்போதிருந்த சிமென்ட் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு சிமென்ட் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் 700 டன்களுக்கு ரூ.5.6 லட்சத்தை வசூலித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் முதல்வர் பதவியையே இழந்தார்.
செல்வராஜ்,திருச்சி.