லாக் - அப் மரணங்கள், லஞ்சம் போன்றவற்றால் அண்மைக் காலமாகக் காவல் துறை மீது பொதுமக்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். இந்த நிலையில், காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தியிருப்பது காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
காவல் துறையினர் என்றாலே, அதிகாரமும் ஆணவமும் கொண்டவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள், காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும்.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.