இப்படிக்கு இவர்கள்

இன்னொரு குழு எதற்காக?

செய்திப்பிரிவு

இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இதுவரை எந்த உண்மையையும் பதிவுசெய்யவில்லை.

இப்படியான நிலையில் புதிதாக ஒரு குழு அமைக்கப்படுவது எதற்காக? இலங்கையில் விரைவில் தேர்தல் நடத்தப்படுகிறது. தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இப்படியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ராஜபக்ச.

- ஆர். முருகானந்தம்,கீரனூர்.

SCROLL FOR NEXT