‘இன்னொரு இந்தியா’ தொடர் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா, பிஹார் ஆகிய மாநிலங்களின் வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் பரிதாப நிலையைப் பதிவுசெய்தது.
இயற்கையை நேசிக்கும் அந்த எளிய மக்கள், மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையையும், செல்வாக்கு மிக்க அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கிறார்கள்.
புறக்கணிப்பால் உருவாகும் வன்முறையை வெறுப்பால் ஒருபோதும் வெல்ல முடியாது என்பது நியாயமான உண்மை. இந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பது எப்போது?
- ஜீவன். பி.கே.,கும்பகோணம்.