திருவள்ளுவருக்கு உயிர் கொடுத்த ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா பற்றிய செய்திக் கட்டுரை படித்தேன். திருவள்ளுவரின் படம் வரையாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என பிரம்மச்சரியம் இருந்து, ஓவியம் வரைந்த ஓவிய மேதையின் தமிழார்வம் வியப்பை உண்டுபண்ணியது.
திருவள்ளுவரை வரைந்த ஓவிய மேதை வேணுகோபால் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற ஆதங்கம் நிச்சயம் வெற்றி பெறும். கால ஓட்டத்தில் மறந்துவிட்ட மாமனிதர்களை நினைவூட்டும் ‘தி இந்து’வின் தனிப் பண்பு தொடர வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சியில், உயிரைப் பணயம் வைத்து, சட்டசபை கொடிக்கம்பத்தில் ஏறி தேசியக் கொடி ஏற்றியவரும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அதிகாரபூர்வ ஓவியத்தை வரைந்தவருமான பாஷ்யம் (எ) ஆரியாவைப் பற்றிய கட்டுரையும் வெளியிட்டு, அவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும். ‘பூச்செண்டு’ பகுதிக்குப் பூச்செண்டு கொடுத்துத்தான் பாராட்ட வேண்டும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.