ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத இந்தச் சூழலில்,தேசிய அரசு போல பல கட்சி அரசு அமைப்பது என்பது அற்புதமான யோசனை.
ஏற்கனவே பல துயரங்களை அனுபவித்த அம்மாநில மக்கள் மீது உடனடியாக இன்னொரு தேர்தலைத் திணிப்பது சரியான முடிவாக இருக்காது.
அரசியல் கட்சிகள், வெற்றி எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்ளலாம். அமைச்சரவையை அடிக்கடி மாற்றாமல் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒற்றுமையாக இருந்து அம்மாநிலத்தை ஆட்சிசெய்யலாம்.
தொடர்ந்து அமைதியற்ற சூழலில் வாழும் அந்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் செய்ய வேண்டியது இதைத்தான்.
- மு. தண்டாயுதபாணி,இல்லோடு.