இப்படிக்கு இவர்கள்

ஒரு விளக்கம்

செய்திப்பிரிவு

டிச.20 அன்று வெளியான ‘தி இந்து’ நாளிதழின் சொந்த வீடு இணைப்பிதழில் ‘நான் ஏமாந்த கதை’ என்னும் தலைப்பில் பி.ஏ. ரமேஷ் என்ற வாசகர் தனது வீடு கட்டும் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்பவரது பெயரையோ அவர் செய்யும் வேலையையோ குறிப்பிடாமல் அவரது சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து, விழுப்புரம் விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். இதற்காக வருந்துகிறோம். கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை இது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

- ஆசிரியர்

SCROLL FOR NEXT