இப்படிக்கு இவர்கள்

ஆபத்தான நாடு

செய்திப்பிரிவு

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் எழும் ஆபத்தைவிட மற்ற எந்த நாட்டாலும், எந்த அணுசக்தியாலும் ஆபத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது மிகச் சரியானது.

தான் நினைத்தால் யாரையும், எந்த நாட்டையும் செயல்பட விடாமல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி சர்வாதிகாரம் செய்யும் அமெரிக்காவைத் தட்டிக்கேட்க உலக நாடுகளில் ஒன்றுக்குக் கூடத் துணிச்சல் இல்லாதிருப்பது துரதிர்ஷ்டம்.

- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.

உலக அமைதிக்கு அமெரிக்காதான் பேராபத்தாக இருக்கிறது என்று தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பல உண்மைகள் அடங்கியிருக்கின்றன. உலக நாடுகளிலேயே ஆயுதங்களை அதிகம் விற்றுப் பணம் சம்பாதிக்கும் நாடான அமெரிக்கா, தன்னை உலக அமைதியின் தூதுவனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. நாய் விற்ற காசு குரைக்காதுதான். ஆனால், கடிக்காமல் இருக்காது. அந்தக் கடியைத்தான் அமெரிக்கா வாங்கிக்கட்டிக்கொண்டு தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.

- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

SCROLL FOR NEXT