நோய்த் தடுப்பில் வாசனைத் திரவியங்களுக்கு, அதிலும் குறிப்பாக மஞ்சளுக்கு உள்ள ஆற்றல்குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழகப் புற்றுநோய் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பரத் பி. அகர்வால் வலியுறுத்தியிருக்கிறார்.
மஞ்சள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்தாலும் இதன் சாகுபடி, அறுவடை வழிமுறைகளை மேம்படுத்தவோ, பதம் கெடாமல் சேமித்துவைக்கக் கிடங்குகளைக் கட்டித்தரவோ மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டாதது கவலை தருகிறது.
ஏற்றுமதியாளர்களுக்குச் சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க வேண்டும். மஞ்சள் சாகுபடியாளர்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களைவிட அதிக விளைச்சலையும் நல்ல லாபத்தையும் விவசாயிகள் பெற தமிழக அரசும் மத்திய அரசும் அக்கறை செலுத்துவது அவசியம்.
- ஜி. ராமச்சந்திரன்,‘தி இந்து’ இணையதளத்தில்...