இப்படிக்கு இவர்கள்

தலிபான்களை முஸ்லிம்களாக ஏற்கக் கூடாது

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல், இதுவரை மனித குலத்துக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட பரஸ்பர வெறுப்பின் விளைவுகளே இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். வெற்று அஞ்சலிகளையும், கண்டனங்களையும் கேட்டு புளித்துப்போய்விட்டது. இந்தக் கொடூர நிகழ்வுகள் மீண்டும் தொடராத வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

இஸ்லாத்தில்போருக்குக் கடுமையான விதிமுறைகள் உண்டு. அதில் முதலாவது குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் கொல்லக் கூடாது என்பதுதான். “எவன் ஒருவன் தன் கரத்தாலும், நாவாலும் பிறருக்குத் தொல்லை தருவதில்லையோ, அவன்தான் உண்மையான முஸ்லிம்” என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.

அப்படி இருக்கையில் பச்சிளம் குழந்தைகளையும், மாணவர்களையும் அநியாயமாகக் கொன்று குவிக்கும் தலிபான்களை முஸ்லிம்களாக ஏற்கக் கூடாது.

- எம். முகமது ரியாத்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT