இப்படிக்கு இவர்கள்

வார இதழ் வேண்டும்

செய்திப்பிரிவு

‘தி இந்து’வின் ஓராண்டு நிறைவு விழாவில், தலை நகரில் வாசகர்களை இணையவைத்ததற்கு நன்றி. ஆன்மிகம், இலக்கியம், ஊடகம், அறிவியல் மற்றும் நீதித் துறையிலிருந்து விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் கருத்துரைகள் எங்களைச் சிந்திக்கவைத்தது.

அதோடு, அவர்கள் தாய்மொழியில் படித்து, வாழ்க்கையில் உயர்ந்ததைச் சுட்டிக்காட்டியது, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, இந்து குழுமத்திலிருந்து வார இதழ் ஒன்று வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை, விரைவில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

வாசகர்கள் சார்பாக அரசியல் பிரமுகர்கள் ‘இந்து’வின் சமூகம் சார்ந்த சேவையைப் பாராட்டிப் பேசியது கூடுதல் சிறப்பு.

- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.

SCROLL FOR NEXT