சூரிய ஒளி மேற்கூரைத் திட்டத்தின் கீழ் நான் அனுப்பிய விண்ணப்பம் தேர்வானது. ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சூரிய ஒளி மேற்கூரை அமைக்க மின்வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க விண்ணப்பம் செய்து ஒன்பது நாட்களாகியும் கிடைக்கவில்லை. கேட்டால், ‘‘நீங்கள்தான் மனு கொடுத்துள்ளீர்கள், நாங்கள் எங்கள் அலுவலகத்தில் இதுபற்றி அறிந்துகொண்டுதான் கொடுக்க முடியும்’’ என்று சொல்கிறார்கள்.
இந்த வேலைக்கே ஒன்பது நாட்கள் ஆகியும் முடியவில்லை என்றால், மற்ற வேலைகளையெல்லாம் எப்படி 30 நாட்களுக்குள் முடிப்பது? எனவே, நான் அந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டேன். சூரிய ஒளி மேற்கூரைத் திட்டத்தின் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சான்றிதழ்கள் விரைவில் கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் வெற்றிகரமாக அமையும்.
- கே. சிராஜுதீன்,முசிறி.