அண்மையில் பாஜகவில் இணைந்திருக்கும் நடிகர் நெப்போலியன், அதற்குக் காரணம் திமுக-வில் ஜனநாயகம் இல்லை என்கிறார். அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள இவருக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்ததா?
எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளுடன் அமைச்சர் பதவியும் அந்தக் கட்சியில் இருந்தபோது அவருக்குக் கிடைத்தன. ஆனால், இப்போது வேறு கட்சியில் சேர்வதற்காக, தேடிப் பிடித்து ஒரு காரணத்தைச் சொல்கிறார்.
எஸ். வேணுகோபால்,‘தி இந்து’ இணையதளத்தில்…