ஞானக்கூத்தன் நேர்காணல் ஆழ்மனதைத் தொட்டது. தமிழ்ப்புதுக்கவிதை முன்னோடியான ஞானக்கூத்தன்,“ஒரு முழுவாழ்க்கை உடைந்துபோய்விட்டது.
தொட்டால் பால் திரிவது மாதிரி எல்லாமே இழந்துபோய்விட்டது.எனது கவிதைகள் இழந்ததை, உடைந்ததைப் பேசுகின்றன” என்று சொல்லும்போது நெஞ்சம் வலிக்கிறது. எல்லாவற்றையும் உடைத்துப்போட்டு எதைக் கட்டப்போகிறோம் என்று தெரியவில்லை. ‘கலை இலக்கியம்’ பகுதியில் வெளியாகும் கட்டுரைகள், நேர்காணல்கள் சிறந்த இலக்கியத் தரத்துடன் இருக்கின்றன. இப்பகுதியில் வெளியாகும். நேர்காணல்களைத் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும்.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.